10-Aug-2010, 08:55 AM
Here's my tamil translation.
இவ்வளவு தூரத்துல இருந்து பாக்கும்போது நம்ம பூமி அவ்வளவு ஒன்னும் முக்கியமா தோனல. ஆனா நமக்கு அது அப்படி இல்ல. மறுபடியும் அந்த சின்ன புல்லிய கொஞ்சம் உத்து பாருங்க. அதுதான் இங்க. அதுதான் வீடு. அதுதான் நாம எல்லாம். ஒங்களுடைய உற்றார் உறவினர் அத்தன பேரும் அந்த புல்லிலதான் இருக்காங்க. ஒங்களுக்கு தெரிஞ்ச அத்தன பேரும், நீங்க கேள்விப்பட்ட அத்தன பேரும், மனிதனா பிறந்த ஒவ்வொருத்தரும் வாழ்ந்த இடம் அந்த சின்ன புள்ளி. நம்மளுடைய மொத்த இன்பம், துன்பம், ஆயிரக்கணக்கான அபரீத நம்பிக்கை கொண்ட மதங்கள், ஜாதிகள், சித்தாந்தங்கள், பொருளாதார கொள்கைகள், ஒவ்வொரு வேட்டைகாரனும் காட்டுவாசியும், ஒவ்வொரு வீரனும் கோழையும், ஒவ்வொரு கலாச்சரத்த ஒருவாக்குனவனும், சின்னாபின்னமாக்குனவனும், ஒவ்வொரு ராஜாவும் விவசாயியும், காதல்ல விழுந்த அத்தன இளைஞர்களும், ஒவ்வொரு அம்மா, அப்பா, இலட்சியமுள்ள மகனும் மகளும், ஆராய்ச்சியாலாரும் விஞ்ஞானியும், தர்மம் சொல்லிக்குடுக்குற சாமியாரும், ஊழல் பண்ற அரசியல்வாதியும், அத்தன சுபெர்ஷ்டர்களும் தலைவர்களும், சரித்திரதுல உள்ள அத்தன பாவியும் புண்ணியவானும் வாழ்ந்தது அந்த புல்லில. சூரிய வெளிச்சத்துல மெதந்துகிட்டு இருக்க அந்த கால் தூசில.
அகண்டு விரிஞ்ச இந்த அகிலத்துல, நம்ம பூமி ஒரு சின்ன மேடைதான். இந்த சின்ன மேடைல அதிபர்களும் அரசர்களும் எத்தன றேத்த ஆறுகள ஓடவிட்டுருக்கங்கனு கோங்கம் நெனச்சு பாருங்க. எல்லாம் எதுக்கு? கொஞ்ச நேரத்துக்கு ஒரு புல்லில ஒரு பகுதிக்கு ராஜாவாகுரதுக்கு. இந்த தூசில ஒரு பக்கத்துல இருக்குரவங்களுக்கும், அவ்வளவு வித்தியாசம் இல்லாத இன்னொரு பக்கத்துல இருக்குரவங்களுக்கும் இருக்குற வெருப்ப கொஞ்சம் கவனியுங்க. எத்தன கொடூரங்கள்? எத்தனதடவ ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்காம போராடுறோம். ஒருத்தர ஒருத்தர் கொல்றதுக்கு எப்படி தவிக்குறாங்க. எவ்வளவு வெறி?
நம்ம வாழற விதம், நம்மளோட தற்பெருமை, என்னமோ இந்த அகிலத்துலத்துலையே மனித இனம்தான் ரொம்ப முக்கியம் அப்படிங்குற அறியாமை, எல்லாமே இந்த ஒரு சின்ன புல்லிய பாத்ததும் மறந்சுபோயிருது. நம்மள நாமே கேள்வி கேக்க தூண்டுது. இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்துள, நம்ம பூமி ஒரு தனி தூசி. இப்படி தனியா மெதந்துகிட்டு இருக்குற நம்மள நம்மகிட்ட இருந்தே காப்பாத்துறதுக்கு உதவி எங்க இருந்தும் வர்ற மாதிரி தெரியல.
நம்மளமாதிரி உயிரினங்கள் வாழறதுக்கு இந்த பூமிய விட்டா வேற பூமி இப்போதக்கி கெடயாது. இன்னும் சில வர்சங்கள்ள வேற உலகங்கள போயி பாத்துட்டு வேண்ணா வர முடியும். ஒரேடியாத குடிபோக முடியாது. புடிக்கிதோ புடிக்கலையோ, இப்போதக்கி நமக்கு இருக்கிறது இந்த பூமிதான்.
வானவியல் நமக்கு அடக்கமும் ஒழுக்கமும் கத்துக்கொடுக்குற ஒரு அனுபவம்னு சொல்லுவாங்க. மனிதனோட பொய்யான தட்பெறுமய சுட்டிக்கட்டுரதுக்கு நம்ம பூமியோட இந்த தொலைதூர படமே போதும். எனக்கு இந்த படம் மனுஷன மனுஷன் அன்போட பாத்துக்க வேண்டிய அவசியத்த சுட்டிக்காட்டுது. நாம பாதுகாக்க வேண்டிய இந்த சிறு நீல புள்ளி. நமக்கு தெரிஞ்ச ஒரே வீடு.
- Now if only Morgan Freeman spoke Tamil.